எரிபொருள் வரிசையில் நின்ற சாரதி ஒருவர் உயிரிழப்பு

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை – வேகட பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியான 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளார், எனினும் குறித்த சாரதி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.