
எரிபொருள் பிரச்சினைக்கு என்னால் தீர்வு காண முடியும் – அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்
எரிபொருள் பிரச்சினைக்கு என்னால் தீர்வு காண முடியும், என சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சில் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான், சவூதி அரேபியாவிலுள்ள பெற்றோலியம் கனியவள பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவன்.
எங்கள் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றவரே. இன்று சவூதி அரேபியாவில் எரிபொருள் அமைச்சராக உள்ளார்.
எனவே, இதுகுறித்த எனது நிபுணத்துவத்தை பகிர்ந்துகொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கப்படும், என அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
