எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு துண்டு சீட்டு விநியோகம்

எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு நாளை திங்கட்கிழமை முதல் துண்டு சீட்டை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் வாரத்தில் எரிபொருள் விலை மீண்டும் திருத்தம் செய்யப்படக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.