எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை : பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு

பொலன்னறுவை – மெதிரிகிரிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று திங்கட்கிழமை எரிபொருள் விநியோகிக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியது.

எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நேற்று இரவு ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து அங்கு திரண்டிருந்த மக்கள் கற்களை வீசி தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.