எரிபொருள் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ள தகவல்

எதிர்வரும் வியாழக்கிழமை பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 25ஆம் திகதி டீசல் அடங்கிய கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில்  தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சுகாதார சேவையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில்  வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார சேவையில் ஈடுபடும் ஏனைய பணிக்குழாமினர் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.