
எரிபொருள் தாங்கியில் பெற்றோலுடன் மண்ணெண்ணெய்யை கலந்த இருவர் கைது
ஒக்டெய்ன் 92 ரக பெற்றோலுடன் 13,200 லீற்றர் மண்ணெண்ணெய்யினை கலந்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் சப்புகஸ்கந்த – மாபிம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதி மக்களினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை தொடர்ந்து, எரிபொருள் தாங்கி சாரதிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலன்னாவை எண்ணெய் தாங்கி வளாகத்தில் இருந்து பேருவளை பகுதிக்கு பெற்றோலை ஏற்றிச் சென்ற தாங்கி ஒன்று, மாபிம பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மற்றுமொரு தாங்கியில் இருந்து, மண்ணெண்ணெய் கலக்கப்பட்டதாக சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்
