எரிபொருள் சரக்கு கப்பல்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

அண்மையில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த எரிபொருள் சரக்கு கப்பல்களுக்கு டொலர் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, 37,000 மெட்ரிக் தொன் 92 ஒக்ரெய்ன் பெற்றோல் சரக்கு மற்றும்  100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சரக்குகள் இறக்கும் பணி இன்று வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.

அத்துடன், 2 நாட்களுக்கு முன் வந்த 40,000 மெட்ரிக் தொன் டீசல் சரக்கு நாளை சனிக்கிழமை காலை இறக்கும் பணி நிறைவடைகிறது.

மேலும்,  40,000 மெட்ரிக் தொன் டீசல் சரக்குக்கு டொலர் செலுத்தினால் இறக்கும் பணிக்காக விடுவிக்கப்படும், எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.