
எரிபொருள் கோட்டாவில் மாற்றம்?
தற்போது அமுலிலுள்ள எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கொள்வனவிற்கான இயலுமை உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு எரிபொருள் கோட்டா முறையில் மாற்றம் ஏற்படுத்தாதிருக்கவும் வாராந்தம் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை மாற்றமின்றி பேணவுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிபொருள் சந்தையில் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், தற்போது அமுலிலுள்ள எரிபொருள் கோட்டா முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக்கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்