
எரிபொருளை வழங்கும் நேரம் : அரச இணையதளத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
இலங்கையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை வழங்கும் நேரங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்கி வந்த அரச இணையத்தளத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக, இணையத்தள செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐசீரிஏ நிறுவனம் இணைந்து குறித்த இணையத்தள செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
