
எரிபொருளை நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிச்சென்ற கார்
கொட்டாவ சித்தமுல்லை பெட்ரோல் நிரப்பும் நிலையமொன்றில் எரிபொருளை நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நபர் 21,320 ரூபா பெறுமதியான எரிபொருளை நிரப்பிவிட்டு கியூ ஆர் குறியீட்டை காண்பிப்பதாக கூறி பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த காரின் இலக்க தகடு போலியானது என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் இவை அனைத்தும் அங்கிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
