எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

எரிபொருட்களின் விலைகளில் இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் ஐ. ஓ. சி. நிறுவனம் அறிவித்துள்ளன.

இந்த புதிய திருத்தத்தின் பிரகாரம் பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 332 ரூபாவாகும். பெற்றோல் 95 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.

மேலும் டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 307 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 352 ரூபாவாகும்.

இந்த நிலையில் மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்