
எம்.எஸ்.தோனி ஓய்வு? வெளியான முக்கிய தகவல்
2026 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் தொடர்ந்து விளையாடுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்
