2026ஆம் ஆண்டுக்கான 78ஆவது எம்மி விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிலையில், செலினா கோமஸ், சென்டாயா உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் தங்களது கண்கவர் ஆடைகளுடன் விழாவின் சிவப்புக் கம்பளத்தில் கவனம் ஈர்த்தனர்.
சென்டாயா படிகக் கற்கள் பதிக்கப்பட்ட பிரத்யேக பிராடா(Prada) ஆடையிலும், செலினா கோமஸ் தங்க நிற Louis Vuitton ஆடையிலும் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
மேலும், நிக்கோல் கிட்மேன், எல் ஃபேனிங், ஃபுளோரன்ஸ் பக், மாரிஸ்கா ஹார்கிடே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் தங்களது தனித்துவமான தோற்றத்தால் எம்மி விழாவின் பேஷன் நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.












