
எம்பொக்ஸ் தொற்று: 610 பேர் பலி
குரங்கு காய்ச்சல் எனப்படும் எம்பொக்ஸ் தொற்றால் கொங்கோ குடியரசில் இதுவரை 610 பேர் வரை உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 17,800ற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், அங்கு தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்வது அவசியம் என அந்த நாட்டு மக்களுக்கு சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த மாதம் கொங்கொ குடியரசின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சுகாதார நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
