எமது அரசாங்கத்தில் சகல அரச பணியாளர்களுக்கும் 57,500 ரூபாய் சம்பளம் – சஜித் பிரேமதாச

தங்களது அரசாங்கத்தில் சகல அரச பணியாளர்களுக்கும் கொடுப்பனவுகள் அடங்கலாகக் குறைந்தபட்ச வேதனமாக 57, 500 ரூபாய் வழங்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குறித்த அளவில் வேதனத்தை அதிகரிப்பதற்காக ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கம் செயற்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரக்காபொல பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி சகல மக்களும் இணைந்து சாதாரண மக்களுக்கான ஒரு யுகத்தை உருவாக்குவார்கள்.

அப்போது நாட்டில் உள்ள அரச பணியாளர்களின் வேதனம் வாழ்க்கை செலவுக்கு ஏற்ற வகையில் திருத்தப்படும் எனத் தாம் உறுதியளிப்பதாகவும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்