எப்ஸ்டீன் காதலியுடன் மெலானியா ட்ரம்ப் நடத்திய இரகசிய உரையாடல்கள் அம்பலம்!

அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்டுள்ள 3 மில்லியன் பக்கங்கள் கொண்ட ஜெப்ரி எப்ஸ்டீன் விசாரணை ஆவணங்களில், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்பின் பெயரும் இடம்பெற்றுள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு மெலானியா ட்ரம்பிற்கும், எப்ஸ்டீனின் உதவியாளரும் காதலியுமான கிஸ்லேன் மாக்ஸ்வெல்லிற்கும் (Ghislaine Maxwell) இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மின்னஞ்சல் உரையாடல்கள் இதில் அம்பலமாகியுள்ளன 2002 அக்டோபரில் மெலானியா எழுதியதாகக் கூறப்படும் மின்னஞ்சலில், “அன்புள்ள G! எப்படி இருக்கிறீர்கள்? நியூயார்க் இதழில் எப்ஸ்டீன் (JE) பற்றிய கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது.

அந்தப் படத்தில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாக்ஸ்வெல் மீண்டும் நியூயார்க் வரும்போது தன்னை அழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மெலானியாவின் மின்னஞ்சலுக்கு பதிலளித்த மாக்ஸ்வெல், அவரை “Sweet pea” என அன்புடன் விளித்து, தனது பயணத் திட்டங்கள் மாறியுள்ளதால் தற்போதைக்குச் சந்திக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார் இந்த உரையாடல்கள் இடம்பெற்ற காலத்தில் மெலானியாவுக்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் இடையில் திருமணம் நடைபெறவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.

எப்ஸ்டீன் விவகாரத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் அல்லது மெலானியா மீது எந்தவிதமான நேரடி குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. முன்னதாக ட்ரம்ப் கையெழுத்திட்ட ‘எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்’ (Epstein Files Transparency Act) கீழேயே இந்த ஆவணங்கள் தற்போது மக்கள் பார்வைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளம் பெண்களைப் பாலியல் கடத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன், 2019 இல் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது உதவியாளர் கிஸ்லேன் மாக்ஸ்வெல் தற்போது 20 ஆண்டுகால சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றார்.