எப்பவும் வேலை வேலைன்னு இருக்காம உங்களையும் கொஞ்சம் கவனியுங்க…
பெண்கள் எப்பொழுதும் வீடுஇ அலுவலகம்இ குழந்தைகள்இ கணவன் என்று அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்இ தங்களை பார்த்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள். இவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை காட்டிலும் தங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
பெரும்பாலான பெண்கள் இந்த தவறை தான் செய்கிறார்கள். நேரத்திற்கு சாப்பிடாமல், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் ஏனோ தானோ என்று தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
இது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக பெண்கள் தங்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்களின் உடலைக் காட்டிலும் பெண்களின் உடல் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. எனவே பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஒரு வேலை நீங்களும் எல்லா நேரமும் பிசியாக இருந்து, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாத ஒரு பெண்ணாக இருந்தால் இந்த பதிவில் உங்களுக்கான ஒரு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை முறையாக பின்பற்றுவதன் மூலமாக நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ளலாம்.
- முதலில் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்க பழகிக் கொள்ளுங்கள். புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- தினமும் கல்சியம் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுங்கள். ஒவ்வொரு பெண்ணும் தினமும் குறைந்தபட்சம் இரண்டு கல்சியம் நிறைந்த உணவுகளையாவது சாப்பிடுவது அவசியம்.
- உணவுகளில் எலுமிச்சைகளை சேர்க்க முயற்சி செய்யுங்கள். எலுமிச்சை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
- முதல் நாள் இரவு தூங்கும் பொழுது நான்கைந்து பாதாம் பருப்புகளை ஊற வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் பாதாமை தோல் நீக்கி அதனை சாப்பிடவும். இந்த பழக்கத்தை தினமும் கடைபிடிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்.
- தினமும் முளைகட்டிய பயிர்களை சாப்பிடும் பழக்கத்திற்கு வாருங்கள்.
- ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது சமிபாட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆகவே முடிந்தவரை உணவுகளை பிரித்து சிறிய அளவுகளாக சாப்பிடவும்.
- உணவுகளை தவிர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை சிற்றுண்டிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிற்றுண்டிகள் பொறுத்தவரை ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பழ வகைகள்இ நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகள் ஆகும். மேலும் உணவுகளை தவிர்ப்பது முற்றிலுமாக தவறு ஒருபோதும் அதனை செய்ய வேண்டாம்.
- உங்கள் வேலை மற்றும் வாழ்க்கையாகிய இரண்டிற்கும் இடையில் சமநிலையை உருவாக்க கற்றுக் கொள்வதன் மூலமாக உங்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தத்தை நிர்வகிக்க தெரிந்து கொள்ளுங்கள். யோகா, தியானம், ஆடல், நடைப்பயிற்சி போன்றவற்றை செய்வது உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
- உடற்பயிற்சி செய்வதற்காக நேரத்தை ஒதுக்குங்கள். இதனை தவறாமல் தினந்தோறும் செய்தல் வேண்டும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்