என்பிபி ஆதரவாளரை தாக்கிய எஸ்ஜேவீ அமைப்பாளர் கைது

நாவலப்பிட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்சீவ தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆதரவாளர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு இரண்டு இலட்சம் ரூபா மற்றும் இரு சரீதப்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சசங்க சம்பத் சஞ்சீவ நாவலப்பிட்டி வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவரை கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை தாக்கியதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த அமைப்பாளரால் விநியோகிக்கப்பட்ட தேர்தல் விளம்பரத்தை ஏற்க மறுத்த ஆதரவாளர் ஒருவரை அச்சுறுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் அவர் முன்னர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.