என்னையும் என் குடும்பத்தையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள்

தன்னையும், தனது குடும்ப உறுப்பினர்களையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை உரிய பாதுகாப்பு வழங்கப்படாததால், பாதுகாப்புக் காரணங்களுக்காக தம்மையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு, அவர் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், “நான் அரசியலில் இருந்து ஒரு ரூபா கூட சம்பாதிக்கவில்லை, நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் முற்றாக தீயிட்டு எரித்து நாசம் செய்ததால், நான் இன்று இந்த நாட்டில் வீடற்றவனாக மாறியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.