
எனது கணவர் நிரபராதி – மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மனைவி செனானி ஜயரத்ன, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தனது கணவருக்காக சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் உத்தியோகபூர்வ முகப்புத்தக (Facebook) பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
12 ஆண்டுகளாகப் பல விசாரணைகளை எதிர்கொண்ட பிறகு, செய்யாத குற்றத்திற்காகத் தனது கணவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது கணவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அரசுக்கு 53 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்திய குற்றத்துக்காக, மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
