‘எனக்கு கிடைக்காத நீ வாழவே கூடாது’ – காதலிக்கு நேர்ந்த கதி

ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை அருகே காதலிக்க மறுத்த பள்ளி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராமேஸ்வரம் அடுத்த சேரான் கோட்டை பகுதியில் கல்விகற்ற வந்த மாணவியை இளைஞன் ஒருவர் வயது (21) காதலின் பெயரில் கடந்த 10 நாட்களாக தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி வழக்கம் போல இன்று புதன்கிழமை காலையில் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த குறித்த இளைஞன் காதலை ஏற்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மாணவி அவர் காதலை மறுத்துவிட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் தான் மறைத்துவந்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தி கொன்றுள்ளார்.

உடனடியாக மாணவியின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மீன் வியாபாரியான கொலையாளியை கத்தியுடன் கைது செய்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களும் பொதுமக்களும் காவல் நிலையம் முன்பு திரண்டு கொலையாளியை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறி தர்ணா போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.