எந்த நேரத்திலும் சட்ட ஆலோசனைகளை வழங்க தயார்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எந்த நேரத்திலும் சட்ட ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நேற்நு வியாழக்கிழமை மாலை இடம் பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

திருகோணமலை நகர சபை மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட இருக்கின்ற நிலையில் அன்புவழிபுரம் வட்டாரம் நகர சபையிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரதேச சபையுடன் இணைத்துக் கொள்ள இருப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியானதையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பான விஷேட கலந்துரையாடல் எம். ஏ.சுமந்திரன் தலைமையில் நகர சபை தவிசாளர், நகர சபை உறுப்பினர்கள், அன்புவழிபுரம் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றலுடன் இடம்பெற்றது.

இதன் போது நகர சபை மாநகர சபையாக மாற்றப்படும் நிலையில் பிரதேச சபை நகர சபையாக மாற்றப்பட்டால் அன்புவழிபுரம் மக்கள் நகர சபைக்குள் இருப்பதற்கு சம்மதிப்பார்கள் எனவும் நம்பப்படுகின்றது.

ஆனாலும் தற்போது நகர சபையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அன்புவழிபுரம் வட்டாரம் பிரதேச சபைக்குள் உள்வாங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அன்புவழிபுரம் வட்டாரம் பகுதி மக்களின் கைகளிலே உள்ளது எனவும் எல்லை நிர்ணய விடயத்தில் பல நோக்கத்தோடு நோக்கப்பட வேண்டும் எனவும் எம். ஏ.சுமந்திரன் இதன்போது தெரிவித்தார்.

மேலும், அன்புவழிபுரம் வட்டாரம் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை வழங்கியதுடன் பல முக்கிய விடயங்களும் இதன் போது ஆராயப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

today news

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP