
எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கத் தாம் தீர்மானிக்கவில்லை, என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றினூடாக அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தன்னை பற்றி சிலர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் மைத்ரிபால சிறிசேன தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினை தற்போது நீதிமன்றில் இருப்பதாகவும், கட்சியின் தலைவர் யார் என்பது தொடர்பில் நீதிமன்றம் இன்னும் தீர்மானம் வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
