எந்தவித அச்சமும் இல்லாமல் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆசிரியர்களுக்கு அழைப்பு!

 

கிழக்கு மாகாண தமிழ் முற்போக்கு ஆசிரியர் சங்கம் நாளை  26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சுகவின விடுமுறை போராட்டத்தில் ஏனைய அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து   போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் , என கிழக்கு மாகாண தமிழ் முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் பிரச்சாரச் செயலாளர் அன்பழகன் ரமணன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விஷேட நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போது கிழக்கு மாகாண தமிழ் முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் பிரச்சாரச் செயலாளர் அன்பழகன் ரமணன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

‘நாடளாவிய ரீதியில் ழூஎதிர்வரும் 26 ஆம் திகதி சுகவின விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கிழக்கு மாகாண தமிழ் முற்போக்கு ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

அதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை கோரியும், பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார ழூசுமைகள் மற்றும் மாணவர்களுடைய போசாக்கு பிரச்சினைகள் அத்தோடு பாடசாலை கற்றல் கற்பித்தல் சாதனங்களின் விலையேற்றம் ஆகிய கோரிக்கைகளை உள்வாங்கி குறித்த போராட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகையினால் எந்தவித அச்சமும் இல்லாமல் அனைத்து அதிபர், ஆசிரியர்களும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

இத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமிடத்து நிச்சயம் அதற்கு எதிரான நடவடிக்கைகளை எமது கிழக்கு மாகாண தமிழ் முற்போக்கு ஆசிரியர் சங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும், தெரிவித்துக் கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்