
எத்தியோப்பிய பிரஜை தனது இரு குழந்தைகளுடன் கைது
கண்டியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து விசா இன்றி கண்டியில் வாழ்ந்த எத்தியோப்பிய பெண் ஒருவரும் அவருடைய இரு குழந்தைகளும் விசா காலாவதியாகியதன் காரணமாக கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் உள்ள ஒருவரை இரு குழுந்தையுடன் எத்தியோப்பியாவிலிருந்து வந்து திருமணம் முடித்து கண்டி அம்பிடிய பகுதியில் வாழ்ந்த நபர்களே கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த பெண் ஏற்கனவே எத்தியோப்பியாவில் ஒருவரை திருமணம் முடித்த நிலையில் அவருக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர் என தெரியவந்துள்ளது.
இக்குழந்தைகளுடனேயே இலங்கையில் ஒருவரை மறுமணம் செய்து அம்பிடியவில் வாழ்ந்து வருகிறார். இந்த வருடம் அவரது வீசா ஜனவரி மாதம் 17ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.
இலங்கையில் எத்தியோப்பிய தூதரகம் இல்லாததால் கண்டி உல்லாச பயணிகளுக்கான பொலிஸ் பிரிவினர் இந்தியாவிலுள்ள எத்தியோப்பிய தூதுவருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை இது பற்றி அறிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
