எத்தியோப்பியாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி பாராட்டு!

 

எத்தியோப்பியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதன்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

உரையின் முக்கிய அம்சங்கள்:

சிங்கங்களின் பூமி: சிங்கங்களின் இருப்பிடமான எத்தியோப்பியாவில் இருப்பது தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருவதாகப் பிரதமர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு: பயங்கரவாதத்திற்கு எதிராக எத்தியோப்பியா எடுத்து வரும் உறுதியான நிலப்பாட்டிற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

வரலாற்றுப் பிணைப்பு: 1941-ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் விடுதலைக்காக இந்திய வீரர்கள் அந்நாட்டு மக்களுடன் இணைந்து போரிட்ட வரலாற்றை அவர் நினைவு கூர்ந்தார்.

ஒத்த கலாச்சாரம்: இந்தியாவின் ‘வந்தே மாதரம்’ மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் ஆகிய இரண்டுமே தாய்நாட்டை ‘அன்னை’ எனப் போற்றுவதைச் சுட்டிக்காட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமையை விளக்கினார்.

பொருளாதார உறவு: எத்தியோப்பியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், இரு நாடுகளும் அமைதி மற்றும் பாதுகாப்பில் இயல்பான கூட்டாளிகள் என்றும் அவர் தெரிவித்தார்.

உயரிய விருது: எத்தியோப்பியா அரசு தனக்கு வழங்கிய உயரிய விருதை 140 கோடி இந்திய மக்களின் சார்பாகப் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.