எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலை தொடர்பான எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, தென்மேல், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், வட மாகாணத்தின் பல இடங்களிலும், அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும், எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.