எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரத்தில் சிறப்பு போக்குவரத்து திட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ​​காலை 7.30 முதல் 10.30 வரை அனுராதபுரம் நகரின் சில முக்கிய வீதிகள், ஜெய ஸ்ரீ மகா போதி மற்றும் தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பிரதான வீதியை அவ்வப்போது மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் இன்று நாட்டிற்கு வரவுள்ளமையால், கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் பேஸ்லைன் வீதி, இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பல சந்தர்ப்பங்களில் மூடப்படவுள்ளது.

அத்துடன் காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம் மற்றும் பத்தரமுல்லை அபே கம ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகள் நாளை பல சந்தர்ப்பங்களில் மூடப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க