எதிர்க்கட்சி தலைவர் மீது கத்தி குத்து தாக்குதல்

தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவர் லீ ஜே-மியுங் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக,  சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவின் தெற்கு துறைமுக நகரமான புசான் பகுதியில் வைத்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவரது கழுத்தின் இடது பக்கத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலை மேற்கொண்ட 50 முதல் 60 இடைப்பட்ட வயதுடைய  சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தென்கொரியாவின் எதிர்கட்சி தலைவர் லீ ஜே-மியுங் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது கழுத்தில் 1 சென்றிமீற்றர் அளவில் காயம் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.