எதிர்க்கட்சித் தலைவரின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

வளமான சமூகம் அமைய தைப்பொங்கல் தினத்தில் நன்றியுணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தைப்பொங்கல் பண்டிகையின் உட்பொருளை சரியாகப் படிப்பதன் மூலம், மக்களுக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட ஆளும் கட்சியை, மக்களுக்கான பொறுப்புகளை நிறைவேற்றுவதாக அடையாளம் காண முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.