எதிர்காலத்தில் மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும்

இன்று வெள்ளிக்கிழமை ஒரு மணிநேர மின்துண்டிப்பிற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போதுள்ள நிலக்கரி எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மட்டுமே போதுமானது என தெரிவித்தார்.