
எச்.ஐ.வி தொற்றை மறைத்த நபரை தேடும் பொலிஸார்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தனது காதலியிடம் தமக்கு எச்ஐவி தொற்று இருப்பதனை மூடி மறைத்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
35 வயதான கேப்ரியல் மெகாதா என்ற நபரை இவ்வாறு மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் இருவரும் நெருங்கி பழகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி இருந்த குறைத்த நபர் இந்த தகவலை தனது காதலியிடம் மறைத்து தொடர்பு பேணி உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் இந்த நபருடன் வேறு எவரேனும் தொடர்பு பேணியிருந்தால் அது குறித்து அறிவிக்குமாறும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த நபரை கண்டால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
