ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

ஊவா மாகாண தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை,  விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் பாலித்த மஹிந்தபால தெரிவித்தார்.

எதிர்வரும் ஞாயிற்றுகிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், பெற்றோர்கள் உள்ளிட்ட பல தரப்புகளில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய  இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்

இதேவேளை மற்றொரு நாளில் குறித்த விடுமுறை நாளிற்கான கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் மாகாண கல்வி செயலாளர் பாலித்த மஹிந்தபால தெரிவித்துள்ளார்.