ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் சம்பந்தமான தெளிவூட்டல்

-மஸ்கெலியா நிருபர்-

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் மூலம் இடம் பெற்று வரும் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதியம் சம்பந்தமான விரிவாக தெளிவூட்டல், இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஹட்டன் சீடா வள நிலையத்தில் இலங்கை சமாதான பேரவையின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் திருமதி இரேஷா உதேனி தலைமையில் ஆரம்பமானது.

நிகழ்வில் சுமார் 180 க்கு மேற்பட்ட நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த பல ஆண்டுகளாக ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் பெற்று கொள்ள முடியாமல் உள்ளவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நுவரெலியா மாவட்ட நுவரெலியா ஊழியர் சேமலாப நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுத்தனர்.

இவ்வாறான சேவையினால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் நன்மை அடைந்தார்கள்.