ஊர் எல்லையில் வெள்ள நீரை வெளியேற்றும் இளைஞர்கள்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் எல்லைக்குட்பட்ட கச்சாய் ஊர் எல்லை பகுதியில் இளைஞர்கள் மற்றும் நகரசபையின் வழிகாட்டுதலுடன் வெள்ள நீரானது இரு நாட்களுக்கு மேலாக வெளியேற்றப்பட்டு வருகின்றது.

கச்சாய் ஊர் எல்லையில் உள்ள 523 ஆம் படையணி முகாமுக்கு அண்மையாக குடியிருக்கும் சுமார் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நகர சபையின் அனுமதியுடன் பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் வெள்ளம் கடலுக்கு வெளியேற்றபட்டு வருகின்றது.

கடந்த மூன்று நாட்களாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், வெள்ளம் குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்