ஊரடங்கு – நாடுமுழுதும் அவசர கால சட்டம்
உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணத்தில் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு, பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், நாடு முழுவதும் அவசர கால சட்டம் அமுலப்படுத்தப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகக்கோரி, பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைதுசெய்யுமாறும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
