
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்ட விளக்கமறியலில்!
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நான்கு கோடியே அறுபது இலட்சம் (46 மில்லியன்) ரூபாய் பணத்தை ஈட்டிய முறையை வெளிப்படுத்தத் தவறியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுஷ பெல்பிட்ட இன்று வெள்ளிக்கிழமை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க முன்னிலையான நிலையில், அவரிடம் ஆரம்பக்கட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
