உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு

-மூதூர் நிருபர்-

வெள்ளத்தினால் கற்றல் உபகரணங்கள் பாதிக்கப்பட்டு ,மனநிலை ரீதியாக அச்சமடைந்து காணப்பட்ட மாணவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு மூதூரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மூதூரிலுள்ள ஷாபிநகர் வித்தியாலயம்,அல்மினா வித்தியாலய மாணவர்களுக்கே உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு நடாத்தப்பட்டது.

இதன்போது மாணவர்களை மகிழ்விக்கும் செயற்பாடுகள்,கற்றல் உபகரணங்கள் வழங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான எம்.பீ.எம்.பைரூஸ் கலந்து கொண்டார்.

இவ் உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வை பிஸ்மி மற்றும் எயிட் போ பியுப்பிள் அமைப்புக்கள் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.