உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

-பதுளை நிருபர்-

மஹியங்கனை பகுதியில் இரண்டு உள்நாட்டு  துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருமட, தியகோபால, பிபில பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரும், மஹியங்கனை, தம்பனை, வட்டுயாவைச் சேர்ந்த 41 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹியங்கனை மற்றும் ரிதிமாலியயெத்த பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு சந்தேக நபர்களையும் மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்