
உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான வாராந்த விற்பனை சந்தை
-கிளிநொச்சி நிருபர்-
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான வாராந்த விற்பனை சந்தை இன்று திங்கட்கிழமை பளை நகரப் பகுதியில் இடம்பெற்றிருந்தது.
குறித்த சந்தையில் உள்ளூரில் உற்பத்தியான மரக்கறி வகைகள் மற்றும் உணவு பொருட்கள் என பலகாட்சிபடுத்தப்பட்டிருந்தன.
குறித்த விற்பனை சந்தையில் இரசாயனபொருட்கள் சேர்க்காது சேதன பசளை மூலம் உருவாக்கப்பட்டமையால் அதிகளவில் மக்கள் நாடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
