உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி: 2 பேர் கைது

-பதுளை நிருபர்-

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவர் நேற்று ஞாயிற்று கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

மடுல்சீமை கல்லுல்ல கீழ் பிரிவு பகுதியை சேர்ந்த 52 மற்றும் 47 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் திங்கட்கிழமை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்