
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
-பதுளை நிருபர்-
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
கிரனாகொட, லுணுகலை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை மாலை லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய லுணுகலை பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்து சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் மேற்குறிப்பிட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் சந்தேக நபருக்கு எதிராக பசறை நீதிவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 18 ம் திகதி வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும், லுணுகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.