
பொத்துவில் பிரதேச உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பொத்துவில் பிரதேச முக்கியஸ்த்தர்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் வியூகங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்ததுடன் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் வேட்பாளர்கள் தெரிவு சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பொத்துவில் பிரதேச அமைப்பாளர், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டார அமைப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் பலருடனும் கலந்துரையாடப்பட்டிருந்தது.