
உள்ளூராட்சிமன்ற பிரதானிகளுடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையே நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திரு. ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திரு. இசட்.ஏ.எம். பைசல், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி உள்ளூராட்சி ஆணையர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான பயன்படுத்த முடியாத வாகனங்களை ஏலம் விடுதல், வாகனங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் பயன்படுத்துதல், ஜப்பானிய உதவியின் கீழ் வழங்கப்படும் கம்பேக்டர் இயந்திரங்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்குதல், கழிவு முகாமைத்துவம் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் திட்டங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை நெறிப்படுத்துதல் மற்றும் வினைத்திறன் மிக்கதாக்குதல் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
