உள்நாட்டு விமான நிலையங்களை மேம்படுத்த அரசாங்கம் திட்டம்

 

விமானங்களுக்கென தனி முனையம் ஒன்றை அமைப்பது குறித்து அடுத்த ஆண்டு சாத்தியக்கூறு ஆய்வு நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டின் சுற்றுலா ஊக்குவிப்புக்கு உள்நாட்டு விமான நிலையங்களை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் கூறினார்.