உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
கொழும்பு மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவஹூவ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவஹுவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மகுலுகஸ்வெவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
