உளவுத்துறை அறிக்கைகளை பகிரங்கப்படுத்தாமல் விரைவாகச் செயற்பட்டோம் : ஜனாதிபதி

8

நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் துரிதமாகச் செயற்பட்டதாகவும், ஆனால் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கும் போதெல்லாம் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதை விட புலனாய்வு அறிக்கைகளுக்கு அமைய செயற்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என புத்தளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

“உலகில் ஒரு போர் சூழல் வெடித்துள்ளது. அதன் காரணமாக இலங்கையும் சில அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது. இலங்கைக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் எமக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தினோம். புலனாய்வு அறிக்கைகள் கிடைத்தால் நாங்கள் ஊடக சந்திப்புகளை நடத்துவதில்லை. தகவல்களுக்கு ஏற்ப செயல்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் பொறுப்பு எனத் தெரிவித்தார்.

புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் அரசாங்கம் அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பல சந்தேக நபர்களை எங்களால் கைது செய்ய முடிந்தது. நாங்கள் ஊடக சந்திப்புகளை நடத்தவில்லை. அதுபற்றி எந்த செய்தியும் வரவில்லை. எந்தவொரு தாக்குதல்களையும் தடுப்பது அரசாங்கமாக எங்களின் பொறுப்பு. நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

சில நாட்களில் இரண்டு முறை புலனாய்வு அமைப்புகள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருடன் அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது சில நேரங்களில் நாங்கள் இரவில் கூட இணைய செயழிகள் மூலமாகவும் விவாதித்தோம். அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம்.

சிலர் குழப்பமடைந்து, இதற்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் மற்றவர்களுக்கு தெரிவித்து பாதுகாப்பு வழங்க மாட்டோம். நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்தோம், என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Sureshkumar
Srinath