
உலக வாய் சுகாதார தினம்
உலக வாய் சுகாதார தினத்தையொட்டி , காலி முகத்திடல் சதுக்கத்தில் இன்று வியாழக்கிழமை காலை தேசிய நிகழ்ச்சி நடைபெற்றது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
வாய்புற்று நோயினால் நாட்டில் தினமும் மூன்று பேர் உயிரிழப்பதாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இலங்கையில் வருடாந்தம் 3000 புதிய வாய்புற்று நோயாளர்கள் பதிவாகுவதாக தெரிவித்தார்.
வாயில் வெள்ளைப் புள்ளி, சிவப்புப் புள்ளி அல்லது அசாதாரண வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் , உடனடியாக சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டால் வாய்ப் புற்றுநோயைக் குறைக்க முடியும் என வைத்தியர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
