உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக, உணவு, எரிசக்தி மற்றும் உரம் என்பனவற்றின் விலைகளில் ஏற்பட்டுள்ள தாக்கம், உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

நேற்று புதன்கிழமை அமெரிக்காவில்  இடம்பெற்ற வணிக நிகழ்வு ஒன்றில், கருத்து தெரிவித்துள்ள உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும், சீனாவில் தொடர்ச்சியான கொரோனா வைரஸ் முடக்கமானது இந்த தாக்க நிலை குறித்த கவலைகளை மேலும் அதிகரிக்கின்றது, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி விலைகள் இரட்டிப்பாகும் என்ற கவலையே, இந்தத் தாக்க நிலையை தூண்டுவதற்கு போதுமானதாகும், இந்தத் தாக்க நிலையை எவ்வாறு தவிர்க்கப்போகிறோம் என்பது கடிமானதாகும், என அவர் தெரிவித்துள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க