உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து இலங்கை அணி சாதனை

-கிண்ணியா நிருபர்-

​இந்தியா-பெங்களூரில் 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை அணி மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை (Runner-up) வென்றுள்ளது.

​இலங்கை யோகா கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்ற வீரர்கள், சர்வதேச தரத்திலான போட்டிகளில் பல தங்க பதக்கங்களை வென்று அசத்தினர்.

இறுதிப் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில், இலங்கை அணி இரண்டாம் இடத்திற்கான வெற்றிக் கேடயத்தைக் கைப்பற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

​இந்த வெற்றியானது இலங்கையில் யோகா கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.